ஆப்நகரம்

அறிவும், சேவை செய்யும் மனப்பக்குவமும் உள்ளவர்கள் அரசியலுக்கு வரலாம்: விஜய் சேதுபதி!

யாருக்கு அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மனப்பக்குவம் உள்ளதோ அவர்கள் அரசியலுக்கு வரலாம் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Apr 2019, 7:26 pm
யாருக்கு அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மனப்பக்குவம் உள்ளதோ அவர்கள் அரசியலுக்கு வரலாம். தேர்தலின் போது பல வருடங்களாக பணம் கொடுக்கிறார்கள். அதனை வாங்கிக் கொண்டு வாக்களிப்பது தவறானது என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில், வெள்ளித்திரை நடிகர்கள் சின்னத்திரை வருவது வரவேற்கதக்கது. இங்கு சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்கள் என்ற பாகுபாடு கிடையாது. வாக்களிப்பது உரிமை, கடமை அதை திரைப்பட நடிகர் செய்வது வரவேற்கத்தக்கது.


அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது கடமை என்பதால் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டது ரெண்டு பக்கமும் உள்ள தவறு. ஓட்டு போடுவது குறித்த விழிப்புணர்வை நடிகர்கள் இணைந்து மக்களுக்கு ஏற்படுத்தினோம்.

தான் அரசியலுக்கு வருவது குறித்து கேட்டபோது அதற்கு அறிவாந்தவர்கள் மட்டும் வந்தால் மட்டுமே போதுமானது. என்கிட்ட இது குறித்து கேட்க வேண்டாம். அணில் சேமியா விளம்பரத்தில் கிடைத்த ஊதியத்தில் எந்த கிராமத்தையும் தத்தெடுக்கவில்லை.

அது முற்றிலும் தவறான செய்தி. தேர்தலின் போது ரொம்ப வருடங்களாக பணம் கொடுக்கிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது தவறானது என்று பலமுறை கூறியுள்ளேன். சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் தவறான செய்திகள் மிக விரைவாக பரவுவதை தடுத்து பாதுகாப்பாக கையாள வேண்டும். சாதி மாற்றி திருமணம் செய்தோர் மகிழ்ந்து வாழும் வாழ்வியலை யாரும் விளம்பரம் செய்யாத நிலையில், டிக்டாக் போன்றவற்றிற்க்கு தடை விதிப்பது குறித்து விளக்கம் கூற இயலாது.

யாருக்கு அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மனப்பக்குவம் உள்ளதோ அவர்கள் அரசியலுக்கு வரலாம் என விஜய்சேதுபதி அப்போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்