ஆப்நகரம்

Thunivu: ஏகே பற்ற வைத்த நெருப்பு: 'துணிவு' வெற்றிக்கு பிறகு மஞ்சு வாரியர் செய்த காரியம்.!

அஜித்தின் 'துணிவு' படத்தில் கண்மணியாக நடித்துள்ள மஞ்சு வாரியர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 18 Jan 2023, 7:09 pm
பொங்கல் திருநாளையொட்டி வெளியாகியுள்ள 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 11 ஆம் தேதி வெளியாகியுள்ள இந்தப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. 'துணிவு' படத்தில் அஜித்தை தொடர்ந்து மஞ்சு வாரியர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனம் ஈர்த்து வருகிறார்.
Samayam Tamil Thunivu
Thunivu


எச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. இந்தப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியது. 'வலிமை' படத்தில் சந்தித்த சரிவை இந்தப்படத்தில் வினோத் சரிக்கட்டி விடுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏறக்குறைய பூர்த்தி செய்துள்ளது 'துணிவு'.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

'துணிவு' படம் முதல் பாதி அஜித் ரசிகர்களுக்கான ட்ரீட்டாகவும், இரண்டாம் பாதி முழுக்க வங்கிக் கொள்ளை பின்னணியில் அங்கு நடக்கும் மியூச்சுவல் பண்ட் மோசடி, கிரெடிக் கார்டு ஏமாற்று வேலைகளை அனைவருக்கும் புரியும்படியாகவும் படமாக்கியுள்ளதாக வினோத்தை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். அஜித்தின் நெகட்டிவ் ரோல் மற்றும் டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Thalapathy 67: 'தளபதி 67' படம் குறித்த தாறுமாறு தகவல்: விஜய்யின் அடுத்த சம்பவம்.!

மேலும் இந்தப்படத்தில் மஞ்சு வாரியர் கண்மணியாக நடித்துள்ளார். அஜித்தை தொடர்ந்து இவரின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ’துணிவு’ படப்பிடிப்பின் போது அஜித்துடன் லடாக் வரை பைக் பயணமும் செய்தார் மஞ்சு வாரியர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ’துணிவு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மஞ்சு வாரியர் முதல் வேலையாக கேரளாவில் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றுள்ளார். எர்ணாகுளம் ஆர்டிஓ அலுவலகத்தில் அவர் லைசென்ஸ் பெற்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் பற்ற வைத்த ஆசையால் மஞ்சு வாரியர் லைசென்ஸ் வாங்கியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Varisu: வாயை கொடுத்து வம்பில் மாட்டிய 'வாரிசு' இயக்குனர்: விளாசி தள்ளும் ரசிகர்கள்.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்