ஆப்நகரம்

‘டிக் டிக் டிக்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘டிக் டிக் டிக்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

TNN 15 Feb 2017, 7:12 pm
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘டிக் டிக் டிக்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
Samayam Tamil tick tick tick filming started
‘டிக் டிக் டிக்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது!


ஜெயம் ரவி & அரவிந்த்சாமி இணைந்து நடித்த படம் ‘போகன்’. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது. இந்நிலையில் ஜெயம் ரவி தனது அடுத்தபடத்தின் வேலையை தொடங்கினார்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் வித்தியாசமான வேடத்தில் ஜெயம் ரவி நடித்து வந்த ‘வனமகன்’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று முதல் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டூடியோவில் தொடங்கியது. படப்பிடிப்பு தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறவுள்ளது.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா நடிக்கிறார். மேலும் படத்தில் ரமேஷ் திலக் உள்பட பலர் நடிக்கின்றனர். படத்தை சக்தி சௌந்திரராஜன் இயக்கி வருகிறார். படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை கோடை விடுமுறையில் வெளியிட உள்ளனர் படக்குழுவினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்