ஆப்நகரம்

வேலை நிறுத்தம் வாபஸ்; முத்தரப்பு பேச்சுவார்த்தை வெற்றி!

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு, முத்தரப்பு பேச்சுவார்த்தை சமூகமாக முடிவடைந்துள்ளது.

Samayam Tamil 18 Apr 2018, 10:29 am
தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு, முத்தரப்பு பேச்சுவார்த்தை சமூகமாக முடிவடைந்துள்ளது.
Samayam Tamil Theatre


கடந்த ஒரு மாத காலமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வந்தது. இந்தப் போராட்டம் டிஜிட்டல்கட்டணக் கொள்ளை மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக நடந்து வந்தது. இந்தப் போராட்டத்தால் மார்ச் 16 ஆம் தேதி முதல்தமிழகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டன. மார்ச் 23 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல சினிமா தொழிலாளர்கள் வேலைஇழந்து பணக்கஷ்டத்தில் தவித்து வருகின்றனர். மேலும் பட படங்களை திரையிட முடியாமல் படக்குழுவினர் உள்ளனர். இந்த பிரச்சனையைதமிழக அரசு தான் தீர்க்க வேண்டும் என நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்தது

இந்நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வணிகவரித்துறைஅமைச்சர் கே.சி.வீரமணி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், டிஜிட்டல் சேவை ஒளிபரப்புநிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தின.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஷால் இனி எல்லா திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனை கணினி மூலமாகவே நடைபெறும்எனவும் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணம் இனிமேல் வசூலிக்கப்பட மாட்டாது எனவும்வேலை நிறுத்தம் குறித்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனால் வரும்வெள்ளிக்கிழமை முதல் படங்கள் ரிலீஸாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்