ஆப்நகரம்

விஜய், சிம்பு கோரிக்கை வீண் போகல: தமிழக அரசு அதிரடி முடிவு

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்து ஆணை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 4 Jan 2021, 12:38 pm
கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் கடந்த நவம்பர் தான் திறக்கப்பட்டன. கொரோனா பிரச்சனை இன்னும் தீராததால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
Samayam Tamil vijay


இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்ரன் ஆகிய படங்கள் ரிலீஸாகவிருக்கிறது. 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தினால் கண்டிப்பாக வசூலில் நஷ்டம் தான் ஏற்படும். இதையடுத்து விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடந்த வாரம் சந்தித்து தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அந்த சந்திப்புக்கு பிறகு முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் தான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய்யின் கோரிக்கை தொடர்பாக தனியாக அறிக்கை வெளியாகும் என்று கூறப்பட்டது.

என் ரசிகர்கள் மாஸ்டர் பாருங்கள், விஜய்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள்: சிம்பு

இதற்கிடையே 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு தியேட்டர் உரிமையாளர்களும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர். சிம்புவும் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியாகி தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

அரசு அனுமதி அளித்துள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தியேட்டர்களுக்கு படையெடுப்பதை பார்க்க முடியும். மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் வசூல் வேட்டை நடத்துவதில் எந்த பிரச்சனையும் இருக்காது. இனி மேலும் பல புதுப்படங்களை தைரியமாக தியேட்டர்களில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்