ஆப்நகரம்

படத்தில் அரசியல் வசனம் பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை: விஜய்யை தாக்கிய பிரபல நடிகர்!

படத்தில் அரசியல் வசனம் பேசி நடிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று நடிகர் விஜய்யை நேரடியாக தாக்கிப் பேசியுள்ளார் பிரபல நடிகர் பவன் கல்யாண்.

Samayam Tamil 23 Nov 2018, 7:08 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிக்கும் எல்லா படங்களிலும் அரசியல் வசனங்கள் இருக்கும். அதேபோல் தான் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படத்திலும் இருந்தது. இந்தப் படத்தில் வழக்கத்துக்கு மாறாக படம் முழுவதுமே அரசியல் அலை வீசியது.
Samayam Tamil vijay-pawan


இந்நிலையில் தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது சென்னையில் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘அரசியல் செய்ய வேண்டும் என்றால் நிஜ வாழ்க்கையில் செய்ய வேண்டும். படங்களில் ஆவேசமாக பேசி மக்களை திசை திருப்ப முயற்சி செய்வதால் எந்த பிரயோஜனமும் கிடையாது. படங்களில் அரசியல் சொல்வது எனக்கு பிடிக்காது’’ என்றார் பவன் கல்யாண்.

தெலுங்கு அரசியலில் நேரடியாக தனது அரசியல் கருத்தை கூறி வருபவர் நடிகர் பவன் கல்யாண் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்