ஆப்நகரம்

Kargil Soldiers : எவ்வளோ பெரிய மனசு இவருக்கு! நிஜமாவே நல்லா இருக்கனும்!

கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு தனக்கு சொந்தமான 175 ஏக்கர் நிலத்தை பிரபல நடிகர் சுமன் எழுதி வைத்துள்ளார்.

Samayam Tamil 8 Apr 2019, 4:47 pm
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுமன். இவர் ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ‘வாட்ச்மேன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, சுமன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாட்ச்மேன்’. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.
Samayam Tamil suman


சமீபத்தில் ‘வாட்ச்மேன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், கலந்துக் கொண்டு பேசிய நடிகர் சுமன், ‘‘ஹைதராபாத் அருகில் எனக்கு 175 ஏக்கர் நிலம் உள்ளது. அதை கார்கில் போரில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களின் குடும்பத்துக்கு கொடுக்கலாம் என்று எனது மனைவி கூறினார்.

நானும் அந்த முடிவை வரவேற்றேன். நாம் உயிரோடு இருப்பதற்கு நாட்டின் எல்லையில் எந்தவித வசதியும் இல்லாமல் கடுமையான சூழ்நிலையில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்புப்படை வீரர்கள் நாட்டை பாதுகாத்துவருகின்றனர். இதை உணர்ந்ததும் நான் முழுமனதோடு எனது 170 ஏக்கர் நிலத்தை கார்கில் போரில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு அளிக்க முன்வந்தேன்’’ என்று கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்