ஆப்நகரம்

Apoorva : எம்.எல்.ஏ மீது நடிகை அபூர்வா புகார்!

டோலிவுட் படங்களின் துணை நடிகையாக, கவர்ச்சி நடிகையாக வலம் வரும் அபூர்வா என்ற நடிகை, தெலுங்கு தேச எம்.எல்.ஏ மீது புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 25 Dec 2018, 6:21 pm
டோலிவுட் படங்களின் துணை நடிகையாக, கவர்ச்சி நடிகையாக வலம் வரும் அபூர்வா என்ற நடிகை, தெலுங்கு தேச எம்.எல்.ஏ மீது புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil apoorva


பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளவர் அபூர்வா. இவர் தெலுங்கு தேச கட்சியின் எம்.எல்.ஏ சிந்தாமணேனி பிரபாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதில், அபூர்வா தன் கணவரை கொல்ல முயன்றதாக தவறாக, எம்.எல்.ஏ.,வை சேர்ந்த யூ-டியூப் சேனலில் வீடியோ போடப்பட்டுள்ளது. ஆதாரமற்ற, தன் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Apoorva Harassment Complaint

" />
அபூர்வாவின் புகாரால் அபூர்வாவிற்கும், எம்.எல்.ஏ, மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

உரிய விசாரணை செய்து தன் வாழ்க்கையில் மன நிம்மதி ஏற்படுத்த வேண்டும் என அபூர்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி

Get Tamil Cinema News, Kollywood News, Tamil Movie News, Celebrity Gossips in Tamil, Cinema News, Tamil Movie Reviews, Tamil Movie Trailer, Teasers. Stay updated with Samayam tamil to read the Latest Tamil News
டிரெண்டிங்