ஆப்நகரம்

Kodi Ramakrishna Died: அருந்ததி பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா திடீர் மரணம்!

அருந்ததி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கிய கோடி ராமகிருஷ்ணா நேற்று உடல்நலக் குறைவால் திடீரென்று காலமானார்.

Samayam Tamil 23 Feb 2019, 12:53 pm
அருந்ததி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கிய கோடி ராமகிருஷ்ணா நேற்று உடல்நலக் குறைவால் திடீரென்று காலமானார்.
Samayam Tamil kodi ramakrishna.


தெலுங்கு திரையில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் கோடி ராமகிருஷ்ணா. இவர் சினிமா துறையில் பிரபல எழுத்தாளராகவும், இயக்குனராகவும் இருந்து வந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் ஆரம்பத்தில் இயக்கிய படங்களில் சில படங்கள் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதில், டாக்டர் ராஜசேகர் நடிப்பில் வெளியான ‘இதுதாண்டா போலீஸ்’மற்றும் விஜய சாந்தி ஐபிஎஸ் ஆகிய படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளன.

சில வருடங்களுக்கு முன்னர் நடிகை அனுஷ்கா நடிப்பில் இவர் இயக்கிய அருந்ததி படமும் தமிழ், ஹிந்தியில் பிரமாண்ட வெற்றி பெற்றன. இந்நிலையில் சமீப காலமாகவே நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்த கோடி ராமகிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று திடீரென்று அவர் மரணமடைந்து விட்டார். கோடி ராமகிருஷ்ணாவின் மறைவால் தமிழ் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நடிகை அனுஷ்கா, நேரில் சென்று இயக்குனரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது உடலைப் பார்த்து கண்ணீர் வடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்