ஆப்நகரம்

இந்தாண்டு டோரண்ட் மூலம் டவுன் லோடு செய்யப்பட்ட படங்களின் பட்டியல்!

இந்தாண்டு தமிழ் ராக்கர்ஸ் டோரண்ட் மூலம் டவுன் லோடு செய்யப்பட்ட படங்களில் பட்டியலை டெக்ஸிப்பியா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 7 Jul 2018, 5:08 pm
இந்தாண்டு தமிழ் ராக்கர்ஸ் டோரண்ட் மூலம் டவுன் லோடு செய்யப்பட்ட படங்களில் பட்டியலை டெக்ஸிப்பியா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil torrents


தமிழ் ராக்கர்ஸால் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மேலும் உலகம் முழுவதும் சில இணையத்தளங்களின் மூலம் அதிகளவில் டவுன்லோடு செய்து படம் பார்க்கின்றனர் பலர்.தற்போது தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில்தான் அதிகமாக பைரசியில் நடமாட்டம் உள்ளது. தற்போது அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட தெலுங்கு படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை டெக்ஸிப்பியா என்ற நிறுவனம் இத் தகவலை வெளியிட்டுள்ளது.

‘பாகமதி’ படம்தான் டோரண்ட் மூலம் அதிகமாக ஷேர் செய்யப்பட்ட படமாம். அதையடுத்து ‘ரங்கஸ்தலம்’. அடுத்ததாக ‘பாரத் அனு நேனு’, ‘மகாநதி’. மேலும் அடுத்தடுத்து பல படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளன.

‘பாகமதி’ - 1.8 மில்லியன், ‘ரங்கஸ்தலம்’ - 1.6 மில்லியன், ‘பாரத் அனு நேனு’ - 1.613,404, ‘மகாநதி’ - 1.499.064, ‘நா பேரு சூர்யா’ - 1,260,708, ‘தோழி பிரேமா’ - 1,007,922, ‘சோலோ’ - 842,475, ‘ஜெய் சிம்ஹா’ - 810,964 உட்பட பல படங்கள் டோரண்ட் மூலம் டவுன் லோடு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்