ஆப்நகரம்

விஜய் பிறந்தநாளன்று எஸ்.ஏ.சி. படம் வெளியீடு!

நடிகர் விஜய் பிறந்தநாளன்று ஏஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த ‘டிராபிக் ராமசாமி’ படம் வெளியாகவுள்ளது.

Samayam Tamil 11 Jun 2018, 5:49 pm
நடிகர் விஜய் பிறந்தநாளன்று ஏஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த ‘டிராபிக் ராமசாமி’ படம் வெளியாகவுள்ளது.
Samayam Tamil traffice ramasamy.


சமூக ஆர்வலராக இருந்து வருபவர் ‘டிராபிக்’ ராமசாமி. தற்போது இவரின் வாழ்க்கை வரலாறு ‘டிராபிக் ராமசாமி’ என்ற பெயரில் படமாக உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் ராமசாமியாக விஜய்யின் அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். இவர் மனைவியாக ரோகிணி நடிக்கிறார். இந்தப் படத்தை விக்கி என்பவர் இயக்கியுள்ளார்.

மேலும் படத்தில் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்ணாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர்.

மேலும் இந்த படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனும் நடிகருமான விஜய் பிறந்த நாளன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்