ஆப்நகரம்

லாக்டவுனில் த்ரிஷாவை இயக்கிய கௌதம் மேனன்: வெளியான வீடியோ

கவுதம் மேனன் இயக்கத்தில் வீட்டில் இருந்தே வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் த்ரிஷா.

Samayam Tamil 2 May 2020, 1:45 pm
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு இன்னும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மே 17 வரை மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது.
Samayam Tamil Trisha


இந்நிலையில் சினிமா துறை முழுமையாக முடங்கியுள்ளதால் பிரபலங்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர். நடிகை த்ரிஷா தனது வீட்டில் இருந்தே தற்போது கவுதம் மேனன் உடன் வீடியோ காலில் பேசியுள்ளார்.

அவரை தனது செல் போனில் 4k-வில் வீடியோ ஷூட் செய்வது எப்படி என சொல்லிக் கொடுத்துள்ளார் கவுதம் மேனன். அந்த வீடியோவை த்ரிஷா தற்போது வெளியிட்டுள்ளார்.

அவர்கள் என்ன வீடியோ ஷூட் செய்தனர் என்பதை தெரிவிக்கவில்லை. அது விரைவில் வெளிவரும் என த்ரிஷா தெரிவித்துள்ளார். விண்ணை தாண்டி வருவாயா படத்தில் கவுதம் இயக்கத்தில் நடித்த த்ரிஷா, தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளார்.

கொரோனா குறித்த விழிப்புணர்வுக்காக எதாவது வீடியோ வெளியிடுகிறீர்களா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதற்கான பதில் விரைவில் கிடைத்துவிடும்.


மேலும் கொரோனா லாக்டவுனில் த்ரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு படம் நேரடியாக OTT யில் ரிலீஸ் ஆக பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்