Trisha And Jayam Ravi's Explanation For Blue Tick Removal
Trisha: பறிபோன ப்ளூ டிக்.. த்ரிஷா, ஜெயம் ரவி விளக்கம் இதுதான்!
Trisha: டிவிட்டரில் ப்ளூ டிக் பறிபோனது குறித்து நடிகை த்ரிஷாவும் நடிகர் ஜெயம் ரவியும் விளக்கம் அளித்துள்ளனர்.
Samayam Tamil20 Apr 2023, 5:41 pm
டிவிட்டர் தங்களின் பெயருக்கு பின்னால் இருந்த ப்ளூ டிக்கை நீக்கியது குறித்து விளக்கம் அளித்துள்ளனர் நடிகை த்ரிஷாவும் நடிகர் ஜெயம் ரவியும்.
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் ஊர் ஊராக சுற்றி வருகின்றனர். ஒவ்வொரு புரமோஷன் நிகழ்ச்சியிலும் படம் குறித்த ஏதாவது ஒரு சுவாரசிய தகவலை கூறி திணறடித்து வருகின்றனர். அந்த வகையில் படத்தின் புரமோஷனுக்காக டிவிட்டரில் தங்களின் பெயர்களை மாற்றினர் நடிகை த்ரஷாவும் நடிகர் ஜெயம் ரவியும். கணவர் மரணத்திற்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுக்கும் மீனா!
ப்ளூ டிக் நீக்கம்
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் த்ரிஷா தனது பெயரை குந்தவை என மாற்றினார். ஜெயம் ரவி தனது பெயரை அருண்மொழி வர்மன் என மாற்றினார். இதையடுத்து அவர்களின் பெயருக்கு பின்னால் இருந்த ப்ளூ டிக்கை நீக்கியது டிவிட்டர். புதிய விதிகளின்படி பெயரை மாற்றினால் ப்ளூ டிக் நீக்கப்படுமாம்.
விளக்கம்
அந்த வகையில் இருவரது பெயருக்கு பின்னால் இருந்த ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டது. அவர்கள் மீண்டும் தங்களின் பெயரை மாற்றியும் கூட ப்ளூ டிக் கிடைக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து நடிகை த்ரிஷாவும் நடிகர் ஜெயம் ரவியும் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி த்ரிஷா கூறியதாகூது, நாங்கள் அனைவரும் எங்கள் பெயர்களை டிவிட்டரில் மாற்றலாம் என இருந்தோம். Arnav: டிவி நடிகர் அர்னவ் மீதான வழக்கு... ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!
சந்தேகத்திற்கிடமான செயல்
அதிக ஆர்வத்தில் நானும் ரவியும் அதை முதலில் செய்தோம். இதனால் எங்களின் ப்ளூ டிக் போனது. அதற்கான காரணம் தெரியவில்லை. ப்ளு டிக் கொண்டு வர குழு வேலை செய்து வருகிறது. எங்களின் பெயரை மாற்றியதால் ப்ளு டிக் கொடுக்க மறுக்கிறார்கள். மீண்டும் ப்ளூ டிக் வாங்க முயற்சி செய்து வருகிறோம். பெயர்களை மாற்றியதால் டிவிட்டர் வரைமுறையில் சந்தேகத்திற்கிடமான செயல் என கூறுகிறது என்றார் த்ரிஷா.
பின்னர் சரி பார்ப்போம்
தொடர்ந்து பேசிய நடிகர் ஜெயம் ரவி, நாங்கள் இப்போது எங்கள் கதாபாத்திரத்திரங்களின் சரிபார்ப்பில் இருக்கிறோம். பின் எங்கள் பெயர் சரிபார்ப்பை பார்ப்போம் என்றார். பொன்னியின் செல்வன் 2 படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதன் விளம்பரத்திற்காக குந்தவையாக த்ரிஷாவும் வந்திய தேவனாக கார்த்தியும் டிவிட்டரில் பேசிக்கொண்டது வைரலானது குறிப்பிடத்தக்கது. Karthi: ஒரே வசனத்தில் பொன்னியின் செல்வன் கதையை சொன்ன ஜெயமோகன்... கார்த்தி பகிர்ந்த ரகசியம்!
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.