ஆப்நகரம்

சாமிக்கும் மாமிக்கும் அதீத ஒற்றுமை!... மறுபடியும் மாமியாக த்ரிஷா

சாமி 2 படத்தில் நடிக்க த்ரிஷா மீண்டும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.

TNN 16 Nov 2017, 11:05 am
சாமி 2 படத்தில் நடிக்க த்ரிஷா மீண்டும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.
Samayam Tamil trisha back in saamy 2
சாமிக்கும் மாமிக்கும் அதீத ஒற்றுமை!... மறுபடியும் மாமியாக த்ரிஷா


ஹரி இயக்கத்தில், விக்ரம், த்ரிஷா நடிப்பில் உருவான வெற்றி படம் சாமி. தற்போது சாமி 2 தயாராகி வருகின்றது.இதில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஹீரோயின்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படத்திலிருந்து விலகுவதாக த்ரிஷா தனது டுவிட்டரில் அறிவித்தார். மகளின் திருமண வேலைகளில் மும்முரமாக இருந்த நடிகர் விக்ரம் தற்போது சற்று சகஜ நிலைக்கு திரும்பியுள்ளதால், த்ரிஷாவிடம், நீங்கள் இல்லாமல் சாமி படம் சரிவராது என ரசிகர்கள் வருந்துவார்கள் என விக்ரம் விக்ரம் கேட்டுக்கொண்டாராம்.

இதையடுத்து மனம் மாறிய த்ரிஷா மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்