ஆப்நகரம்

ஒரே நேரத்தில் மூன்று படங்களை முடித்த த்ரிஷா!

நடிகை த்ரிஷா ஒரே நேரத்தில் மூன்று படங்களின் படப்பிடிப்பையும் நிறைவு செய்தார்.

Samayam Tamil 20 Apr 2017, 3:17 pm
நடிகை த்ரிஷா ஒரே நேரத்தில் மூன்று படங்களின் படப்பிடிப்பையும் நிறைவு செய்தார்.
Samayam Tamil trisha done 3 movies at a time
ஒரே நேரத்தில் மூன்று படங்களை முடித்த த்ரிஷா!


சினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இளம் நாயகிகளுக்கு இணையாக இப்போதும் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்து வருபவர் நடிகை த்ரிஷா. இவர் நடித்த படங்கள் அண்மைகாலமாக எதுவும் சரியாக போகவில்லை. இருந்தாலும் அவரது மார்க்கெட் குறையவில்லை. அதனால் தற்போது அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.


AND ITS A WRAP 🙌🏻🙏🏻💃 #MOHINI #SATHURANGAVETTAI2 #GARJANAI Big thank u to my directors,co-stars n d teams🙏🏻 #horror #adventure #action 🎬🎥❤️😇 pic.twitter.com/97uQE7bBx4 — Trisha Krishnan (@trishtrashers) April 19, 2017
தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்கவேட்டை 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பை ஒரே நேரத்தில் நிறைவு செய்துள்ளார். இந்தச் செய்தியை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்