ஆப்நகரம்

தோழிகளுக்கு பார்ட்டி கொடுத்த த்ரிஷா!

நடிகை த்ரிஷா சமீபத்தில் அவர் தன் தோழிகளுக்கு பிகினி பார்ட்டி கொடுத்துள்ளார்.

TOI Contributor 24 Mar 2016, 1:03 pm
நடிகை த்ரிஷா சமீபத்தில் அவர் தன் தோழிகளுக்கு பிகினி பார்ட்டி கொடுத்துள்ளார்.
Samayam Tamil trisha gave party in bikini
தோழிகளுக்கு பார்ட்டி கொடுத்த த்ரிஷா!

நடிப்பு வட்டத்தை தவிர எந்த கிசுகிசுவிலும் சிக்கிக்கொள்ளாமல் தோழிகளுடன் பொழுதை கழிப்பதும், வெளிநாட்டுக்கு டூர் பறப்பதும் என வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வருபவர் நடிகை த்ரிஷா. காதல், திருமணம் என பிரச்னைகளில் சிக்கினாலும் சோர்ந்து போகாமல் தன்னுடைய நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார் த்ரிஷா.
சினிமா நட்சத்திரங்கள் தங்களுக்குள் பார்ட்டி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதற்கு ‘டிரஸ் கோட்’ பாணியை பயன்படுத்துகின்றனர். கறுப்பு, வெள்ளை உடை, கோட் சூட், வேட்டி, சட்டை என யூனிபார்மாக ஒரே பாணியில் உடை அணிந்து வரவேண்டும் என பேசிக்கொண்டு அதற்கேற்றார்போல் பார்ட்டியிலும் பங்கேற்கின்றனர்.
சமீபத்தில் நடிகை த்ரிஷா தனது தோழிகளுக்கு பார்ட்டி கொடுத்தார். அவர் விதித்த டிரஸ் கோட் நீச்சல் உடை.. அவர் சொன்ன மாதிரி தோழிகளும் நீச்சல் உடையில் வந்தனர். பார்ட்டியும் நடந்தது. அதற்கான புகைப்படங்களை த்ரிஷாவின் தோழிகள் சிலர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் பிகினி உடையை மறைத்து மேலாடை அணிந்துள்ளனர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்