ஆப்நகரம்

‘ரிச்சி’ நிவின்பாலியை வாழ்த்திய த்ரிஷா!

நடிகர் நிவின்பாலி நடித்த ‘ரிச்சி’ படம் வெளியாவதற்கு நடிகை த்ரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

TNN 27 Nov 2017, 4:44 pm
நடிகர் நிவின்பாலி நடித்த ‘ரிச்சி’ படம் வெளியாவதற்கு நடிகை த்ரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil trisha praise to nivin pauly
‘ரிச்சி’ நிவின்பாலியை வாழ்த்திய த்ரிஷா!


நடிகர் நிவின்பாலி, ‘நேரம்’ என்ற படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது. நிவின்பாலி முதன்முறையாக ‘ரிச்சி’ படம் மூலம் நேரடியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.. இதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, “தமிழில் உங்கள் அறிமுகம் நல்வரவு ஆகட்டும்.. உங்களுக்கு சிறப்பானவற்றை தவிர வேறு எதுவும் கிடைக்காது” என குறிப்பிட்டுள்ளார்.


நடிகை த்ரிஷா தற்போது மலையாளத்தில் ‘ஹே ஜூடு என்கிற படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்