ஆப்நகரம்

இதே வேலையா போச்சு ... மீண்டும் தள்ளிப் போகும் த்ரிஷா படம் ; இப்ப என்ன காரணம் தெரியுமா?

நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தள்ளிப்போயுள்ளது த்ரிஷா படம்.

Samayam Tamil 27 Feb 2020, 6:45 pm
த்ரிஷா நடிப்பில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த பரமபதம் விளையாட்டு படம் மீண்டும் தள்ளிப் போயுள்ளது. மார்ச் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil paramapadham vilayattu


திருஞானம் இயக்கும் த்ரில்லர் படமான பரமபதம் விளையாட்டு படத்தில் த்ரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ளார். பெரும் போராட்டங்களுக்கு பின் ஜனவரி 31ம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. பின் பிரச்சனைகளை பேசி தீர்த்து, பின் மீண்டும் ரிலீசுக்கு கொண்டு வர படக்குழு பெரும் சிரத்தை எடுத்துக் கொண்டது.

இதனையடுத்து, பிப்ரவரி 28ம் தேதி அதாவது நாளை இந்த படத்தினை வெளியிடுவது என உறுதி செய்தது படக்குழு. இந்நிலையில், மீண்டும் பின்வாங்கியுள்ளது.

பரமபதம் விளையாட்டு என பெயரை வைத்துக்கொண்டு, தியேட்டர் ரிலீஸ் அறிவிப்பும், பின்வாங்குதலும் என உள்ளே வெளியே ஆடிக்கொண்டிருக்கிறது.


நாளை மொத்தம் ஆறு படங்கள் வெளியாக இருந்தது. திரௌபதி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், காதலில் கட்டுமரமாய் , கல்தா , இரும்பு மனிதன் உள்ளிட்ட படங்களுடன் பரமபதம் விளையாட்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தள்ளிப் போயுள்ளது. இத்தனை படங்கள் ரிலீசாவதால், அதிக தியேட்டர்கள் கிடைக்காததே இதன் காரணம் என தெரிகிறது.

முன்னதாக, இந்த படத்தின் புரொமோசன் நிகழ்வுகளில் த்ரிஷா கலந்து கொள்ள மாட்டேன் என்கிறார் என தயாரிப்பு தரப்பினர் கொந்தளித்தனர். அவரின் சம்பள பணத்தில் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கூறினர். இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்க, இந்த படம் ரிலீசாகாமல் தள்ளிப் போவதும் படத்தின் தயாரிப்பாளர் தரப்பை வருத்தமடையச் செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்