ஆப்நகரம்

பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்கத் துவங்கியுள்ள திரிஷா..!

”என்.ஹெச் 10” என்ற பாலிவுட் படத்தின் ரீமேக் படப்பிடிப்பில் நடிகை திரிஷா கலந்து கொள்ள துவங்கியுள்ளார்.

TNN 9 Jan 2017, 4:18 pm
”என்.ஹெச் 10” என்ற பாலிவுட் படத்தின் ரீமேக் படப்பிடிப்பில் நடிகை திரிஷா கலந்து கொள்ள துவங்கியுள்ளார்.
Samayam Tamil trisha started to participate in nh 10 remake
பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்கத் துவங்கியுள்ள திரிஷா..!


பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடித்த ”என்.ஹெச் 10” என்ற திரில்லர் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.இதில் அனுஷ்கா சர்மாவின் வேடத்தில் நடிகை திரிஷா நடிக்கிறார்.கெளரவக் கொலையை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடித்ததற்காக அனுஷ்கா ஷர்மாவுக்கு பாராட்டுகள் குவிந்தன.எனவே தமிழ் ரீமேக்கில் நடிக்கும் திரிஷாவும் இந்த படத்தில் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு டிசம்பரில் தொடங்கியது.இந்நிலையில் நேற்றிலிருந்து படப்பிடிப்பில் திரிஷா கலந்து கொள்ள துவங்கியுள்ளார்.

முதலில் இந்த படத்திற்கு சமந்தாதான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.ஆனால் ஒரு சில காரணங்களினால் அவருக்கு பதிலாக பின்னர் திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Trisha started to participate in NH 10 remake

அடுத்த செய்தி

டிரெண்டிங்