ஆப்நகரம்

த்ரிஷாவுக்கு திருமணம்: பரபரக்கும் சோஷியல் மீடியா

த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் அவர் புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லையாம்.

Samayam Tamil 30 Aug 2021, 2:25 pm

ஹைலைட்ஸ்:

  • த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்?
  • செட்டில் ஆகப் போகும் த்ரிஷா
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil trisha
1999ம் ஆண்டு நடிகையானார் த்ரிஷா. அவர் 22 ஆண்டுகளாக தொடர்ந்து ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். இது சாதாரண விஷயம் அல்ல.
த்ரிஷாவுக்கு 38 வயதாகிறது. அவரை திருமதியாக பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என்று சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது.

திருமணத்திற்கு தயாராகி வருவதால் தான், கையில் இருக்கும் படங்கள் தவிர்த்து புதுப்படங்கள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று த்ரிஷாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்த நடிகையும், தயாரிப்பாளருமான சார்மி, த்ரிஷா சிங்கிளாக கொண்டாடும் கடைசி பிறந்தநாள் இது தான் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷாவுக்கு திருமணமானாலும் அவர் நிச்சயம் தொடர்ந்து படங்களில் நடிப்பார். த்ரிஷாவுக்கு சினிமா என்றால் உயிர்.

முன்னதாக அவருக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டுவிட வேண்டும் என்று வருண் நிபந்தனை விதித்திருக்கிறார். இதையடுத்து அப்படிப்பட்ட வாழ்க்கையே வேண்டாம் என்று திருமணத்தை நிறுத்திவிட்டார் த்ரிஷா.

எனவே, த்ரிஷா யாரை திருமணம் செய்தாலும், தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்பதை சொல்லிவிடுவார் என்று நம்பப்படுகிறது.

கெரியரை பொறுத்தவரை அவர் தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்