ஆப்நகரம்

ஜூன் 10 முதல் ‘நாயகி’யின் ஆட்டம் ஆரம்பம்

ஜூன் 10ம் தேதி முதல் த்ரிஷா நடித்த ‘நாயகி’யின் ஆட்டம் ஆரம்பமாகவுள்ளது.

TOI Contributor 20 May 2016, 6:20 pm
ஜூன் 10ம் தேதி முதல் த்ரிஷா நடித்த ‘நாயகி’யின் ஆட்டம் ஆரம்பமாகவுள்ளது.
Samayam Tamil trishas nayagi gets a release date on june 10
ஜூன் 10 முதல் ‘நாயகி’யின் ஆட்டம் ஆரம்பம்


சமீபகாலமாக நாயகிகளை முன்னிலைப்படுத்தியும் கொஞ்சம் தமிழ்ப்படங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. அனுஷ்காவுக்கு ஒரு ‘அருந்ததீ’, நயன்தாராவுக்கு ஒரு ‘மாயா’ வரிசையில், த்ரிஷாவுக்கு ‘நாயகி’ படம் அமையுமா என்பதைப் பொறுந்திருந்து பார்க்க வேண்டும். கதாநாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகிவரும் இப்படம் த்ரிஷாவின் 50வது படம் என்பது கூடுதல் சிறப்பு.

த்ரிஷாவிடம் நீண்டநாள் மேனேஜரான கிரிதர் மாமிடிபல்லி தயாரிக்கும் ‘நாயகி’ படத்தை கோவி இயக்கியுள்ளார். கணேஷ் வெங்கட்ராம், சுஷ்மா ராஜ், ஜெயபிரகாஷ், மனோபாலா, கோவை சரளா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். தனது கேரியரில் முக்கியமான படமாக த்ரிஷா கருதும் ‘நாயகி’ படம் வரும் ஜூன் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாம். இதனால் த்ரிஷாவின் பேயாட்டத்தைக் காண ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்