ஆப்நகரம்

ஜெயலலிதாவின் பெயர் கோமளவல்லியா? டிடிவி தினகரன் பதில்!

சர்கார் படம் குறித்து நிலவி வரும் பல்வேறு சர்ச்சைகளில் வில்ல கதாப்பாத்திரத்தின் பெயர் குறித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Nov 2018, 12:41 pm
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள சர்கார் திரைப்படம் பல்வேறு சர்சைகளுக்கிடையிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
Samayam Tamil ttv


இதில், விஜயுடன் கீர்த்தி சுரேஷ், வில்லனாக ராதாரவி மற்றும் வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கள்ள ஓட்டு எதிர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் பெயர் கோமளவல்லியாக அமைக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு சர்சைகள் எழுந்துள்ளன. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, சர்கார் படத்திற்கு அரசியல் ஆதாயம் பூசும் விதமாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கோமளவல்லி என்ற பெயர் ஜெயலலிதாவின் பெயரே அல்ல என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அந்த பெயர் கொண்ட காதாப்பாத்திரத்தில் கூட ஜெயலலிதா நடித்ததே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். சர்கார் படத்தில் ஜெயலலிதா குறித்த தவறான கருத்துகள் இடம் பெற்றிருந்தால் கடும் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்