ஆப்நகரம்

‘லிட்டில் பாய்’ தழுவல்தான் ‘டியூப்லைட்’!

லிட்டில் பாய் படத்தின் தழுவல்தான் உருவாகியுள்ளது ‘டியூப்லைட்’ படம்.

TNN 8 May 2017, 4:35 pm
லிட்டில் பாய் படத்தின் தழுவல்தான் உருவாகியுள்ளது ‘டியூப்லைட்’ படம்.
Samayam Tamil tublite movie is from little boy
‘லிட்டில் பாய்’ தழுவல்தான் ‘டியூப்லைட்’!


பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘டியூப்லைட்’. படத்தை கபீர்கான் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் இருதினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதேசமயம், இப்படத்தின் டீசர், அமெரிக்க படமான ‘லிட்டில் பாய்-’ படத்தின் சாயல் இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், படக்குழுவே டியூப்லைட் படம், லிட்டல் பாய் படத்தின் தழுவல் தான் என்று கூறியுள்ளனர். லிட்டில் பாய் படம் இண்டாம் உலகப்போர் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது.

அதேப்போன்று டியூப்லைட் படமும் போர்கள காட்சியின் பின்னணியில் தான் உருவாகியிருக்கிறது. அதோடு இந்தப்படத்தில் ஒரு சிறுவனை மையப்படுத்தி தான் கதை நருகிறது. லிட்டில் பாய் படத்தின் கதையும் அப்படியே என்பது குறிப்பிடத்தக்கது. டியூப்லைட் படம் வருகிற ரம்ஜான் பண்டிகையின் போது ரிலீஸாக இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்