ஆப்நகரம்

சின்னத்திரையை தொடர்ந்து கோலிவுட்டை கலக்க வரும் ப்ரியா

புகழ்பெற்ற டிவி நடிகையான ப்ரியா பவானி சங்கர் தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

TNN 7 Jun 2017, 4:04 pm
புகழ்பெற்ற டிவி நடிகையான ப்ரியா பவானி சங்கர் தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.
Samayam Tamil tv actress priya bhavanishankar to make her kollywood debut
சின்னத்திரையை தொடர்ந்து கோலிவுட்டை கலக்க வரும் ப்ரியா


டிவி நிகழ்ச்சி தொகுப்பாளியான ப்ரியா பவானி சங்கர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற டிவி சீரியல் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமையால் ஹீரோயின்களுக்கு இணையாக ரசிகர்களை பெற்றுள்ளார். இந்நிலையில், தனது காதலரை திருமணம் செய்து கொள்ளயிருப்பதாகக் கூறி சீரியலில் இருந்து விலகினார். மேலும், திருமணத்திற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் செட்டிலாகயிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால், அவர்களது ரசிகர்கள் திருமணத்திற்குப் பிறகும் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததன் விளைவாக தற்போது தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், எந்தப்படம், யாருடன் நடிக்கயிருக்கிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இன்னும் 15 நாட்களுக்குள் இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular television host and actress Priya Bhavanishankar is all set to make her debut in Kollywood as a heroine.

அடுத்த செய்தி

டிரெண்டிங்