ஆப்நகரம்

டிவி நடிகை மவுனி ராய் தமிழில் ஒரு பாடலுக்கு ஆட அழைப்பு!

‘நாகினி’ டிவி தொடரில் நடிக்கும் நடிகை மவுனி ராய் தற்போது தமிழில் ஒரு பாடலுக்கு ஆடவுள்ளார்.

TOI Contributor 5 Nov 2016, 5:18 pm
‘நாகினி’ டிவி தொடரில் நடிக்கும் நடிகை மவுனி ராய் தற்போது தமிழில் ஒரு பாடலுக்கு ஆடவுள்ளார்.
Samayam Tamil tv actress will do a dance for tamil film
டிவி நடிகை மவுனி ராய் தமிழில் ஒரு பாடலுக்கு ஆட அழைப்பு!


‘நாகினி’ என்ற இந்தி தொடரில் நடித்து வருபவர் மவுனி ராய். இந்த தொடர் தமிழில் டப்பாகி வெளியாகிறது. இந்தி சீரியல்களில் அதிகமாக நடித்து வருகிறார் மவுனி ராய். ‘நாகினி’ தமிழில் டப்பிங் தொடர் மூலம் தமிழில் பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றிருக்கிறார். அதுவும் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் கவர்ந்திருக்கிறார்.

தற்போது மவுனி ராயை சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வைக்க சில தயாரிப்பு நிறுவனங்கள் அவரை தொடர்பு கொண்டிருக்கின்றன. சில பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும்நடனமாட அழைப்பு விடுத்திருக்கின்றன. அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் தமிழ் படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவுள்ளார். இவர் ஏற்கெனவே அபிஷேக் பச்சன் நடித்த ‘ரன்’ படத்தில் நடித்துள்ளார். மேலும் ஒரு பஞ்சாபி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். பின்னர் வாய்ப்பின்றி சின்னத்திரைக்கு சென்றுவிட்டார். தற்போது மீண்டும் பெரிய திரைக்கான வாய்ப்புகள் அவர் வீட்டுக் கதவை தட்டுகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்