ஆப்நகரம்

எனக்கு ஜோடி கிடைச்சிருச்சு “மை ஸ்வீட் ஹீரோ” - DD டூவீட்!

பிரபல சின்னத்திரைத் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி, தற்போது தன்னை விட 13 வயது குறைந்த ஒருக்கு ஜோடியாக ஒருபடத்தில் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 25 Mar 2019, 4:53 pm
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளர். மேலும் ஏராளமான திரையுலக நட்சத்திரங்களை நேர்காணல் செய்துள்ளார். தற்போது இவர் தெலுங்கு படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமாகிறார்.
Samayam Tamil dd


இப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் பூரி ஜெகன்நாத் தான் இயக்குகின்றார். இந்தப் படத்தின் ஹீரோவாக பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகத்தான் டிடி நடிக்கிறார். அப்படி பார்த்தால் தன்னை விட 13 வயது குறைவான ஹீரோவுடன் டிடி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் டிடி தனது டுவிட்டரில் ‘‘மை ஸ்வீட் ஹீரோ’ என்று ஆகாஷை குறிப்பிட்டு இருந்தார். இவர் தமிழில் ‘சர்வம் தாளமயம்’, ‘துருவ நட்சத்திரம்’ என ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்