ஆப்நகரம்

உதயநிதி படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க ஆர்வம் காட்டாத டிவிக்கள்!

உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘இப்படை வெல்லும்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க எந்த டிவி நிறுவனங்களும் முன்வரவில்லை.

TNN 21 Nov 2017, 1:46 pm
உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘இப்படை வெல்லும்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க எந்த டிவி நிறுவனங்களும் முன்வரவில்லை.
Samayam Tamil tv channels do not show interest in udhayanithis movie satellite rights
உதயநிதி படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க ஆர்வம் காட்டாத டிவிக்கள்!


முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள், பெரிய பேனர் தயாரிப்பில் உருவான படங்கள் ஆகியவறறின் டிவி உரிமை என்பது எப்போதுமே நல்ல விலைக்கு விற்கப்படுவது வழக்கம். சில முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளிவருவதற்கு முன்பே டிவி .உரிமையை போட்டி போட்டு அதிக தொகை கொடுத்து பல டிவி நிறுவனங்கள் வாங்கி விடுகின்றனர்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் ’இப்படை வெல்லும்‘. இந்தப் படம் வெற்றிபெறவில்லை. இப்படத்தைத் தயாரிப்பு தரப்பு பெரிய வெற்றி என பொய்யாக விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், படத்தை வாங்கியவர்களுக்கு சுமார் 60 சதவீதம் வரை நஷ்டம் அடைந்துள்ளனர். அது மட்டுமல்ல, பட வெளியீட்டிற்குப் பின் சாட்டிலைட் டிவி உரிமை கொடுத்துவிடலாம் என்று இருந்தார்களாம். ஆனால், படம் தோல்வியடைந்ததால் இப்போது யாருமே வாங்க முன்வரவில்லையாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்