ஆப்நகரம்

உணவுக்காக ஊர் ஊராக சுற்றும் டிவி தொகுப்பாளினி!

நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி உணவு தயாரிப்பது எப்படி என்ற நிகழ்ச்சிக்காக ஊர் ஊராக சுற்றி வருகிறார்.

TNN 28 Oct 2016, 9:50 am
நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி. சின்னத்திரையில் பகுதிநேர தொகுப்பாளினியாக இருந்தார். நகுலை பேட்டி எடுக்கக்போன இடத்தில் காதல் மலர்ந்து அது கல்யாணத்தில் முடிந்தது. திருமணம் முடிந்ததும் முழுநேர தொகுப்பாளினி ஆகிவிட்டார் ஸ்ருதி.
Samayam Tamil tv hostess roams from town to town for food
உணவுக்காக ஊர் ஊராக சுற்றும் டிவி தொகுப்பாளினி!

இவர் புதிய தலைமுறை டிவியில் ஊரும் உணவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். விதவிதமான கிராமத்து உணவுகள், சமைப்பது எப்படி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் ஸ்ருதி.

ஒரு கிராமத்துக்குள் சென்று அங்குள்ளவர்களிடம் இந்த ஊரில் என்ன சாப்பாடு விசேஷம் என்று கேட்கிறார். அதை செய்வதில் யார் ஸ்பெஷலிஸ்ட் என்று கேட்டு தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு அவர்களை அதை செய்ய வைத்து ருசித்து சாப்பிட்டுவிட்டு அடுத்த ஊருக்கு கிளம்புகிறார். ஸ்கூட்டியில், சைக்கிளில், மாட்டு வண்டியில் இப்படி கிடைத்த வாகனத்தில் ஏறி ஊர் ஊராக செல்கிறார்.

சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது. மேலும், நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்துவதற்கு பல திட்டங்கள் வைத்திருக்கிறாராம் ஸ்ருதி நகுல்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்