ஆப்நகரம்

'டியர் கொரோனா' - சர்ச்சை இயக்குனர் ட்விட்! விளாசும் நெட்டிசன்கள்

சர்ச்சைகளுக்கு பெயர்போன இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்போது கொரோனா வைரஸ் பற்றி ட்விட்செய்துள்ளார். அதை பார்த்து நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

Samayam Tamil 4 Mar 2020, 4:33 pm
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் 28 பேரை பாதித்துள்ளது. முதலில் கேரளாவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிகிச்சை பெற்று வீட்டுக்கும்திரும்பிவிட்டனர்.
Samayam Tamil Ram Gopal Varma


ஆனால் தற்போது மொத்தமாக 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அரசு அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மக்களும் பாதுகாப்பு விஷயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பற்றி தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் நக்கலாக ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார்.


இவர் எப்போதும் ட்விட்டரில் மிகவும் சர்ச்சையாக பேசக்கூடியவர். தற்போது கொரோனா விஷயத்தையும் அவர் விடவில்லை.

"டியர் வைரஸ்" என தன் ட்விட்டை எழுத துவங்கியுள்ள அவர், "தயவுசெய்து அனைவரையும் கொன்றுவிடாதே, பிறகு உன்னாலும் வாழ முடியாது. ஏனென்றால் நீ ஒரு ஒட்டுண்ணி. நான் சொல்வதை நம்பவில்லை என்றால் நீ உன் இனம் பற்றி ஒரு crash course படி. உனக்கு நான் வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதான் 'வாழு வாழ விடு'. நாம் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம்" என கூறியுள்ளார் ராம் கோபால் வர்மா.



இந்த ட்விட்டை பார்த்தவர்கள் தற்போது இயக்குனரை கிண்டல் செய்து வருகின்றனர். 'கொரோனா வைரஸ் ட்விட்டரில் இல்லை. நீங்கள் வைரஸ் இருக்கும் இடத்திற்கு சென்று நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாமே' என கூறி கிண்டல் செய்து வருகின்றனர்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்