ஆப்நகரம்

பாகுபலி 2ல் அனுஷ்காவை ஒல்லியாக காமிக்க ரூ.2 கோடி செலவு

இஞ்சி இடுப்பழகி அனுஷ்காவை ஒல்லியாக காமிக்க பாகுபலி 2 டீம் 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

TNN 5 May 2017, 1:59 pm
இஞ்சி இடுப்பழகி அனுஷ்காவை ஒல்லியாக காமிக்க பாகுபலி 2 டீம் 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
Samayam Tamil two crores for anushkas makeover
பாகுபலி 2ல் அனுஷ்காவை ஒல்லியாக காமிக்க ரூ.2 கோடி செலவு


எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ’பாகுபலி 2’. இந்திய சினிமா முதன் முறையாக உலகளவில் வசூல் சாதனை செய்துள்ளது.

இந்த படத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்கா படத்தில் சாதாரணமாக ஸ்லிம்மாக தான் காட்சியளிப்பார். ஆனால் இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக ஏற்றிய உடலை இறக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டாராம். பல முயற்சி செய்தும் உடல் எடை ஏறியதே தவிர குறைய வில்லையாம்.

அதனால் படத்தில் அப்படியே நடியுங்கள் என கூறிவிட்டாராம் பாகுபலி இயக்குனர் ராஜமெளலி. ஆனால் படத்தில் இப்படி காட்டினால் ரசிகர்களுக்கு பிடிக்காது என்பதால் அவரை சிறப்பு கிராபிக்ஸ் முறையில் ஒல்லியாக காட்டியுள்ளனராம்.

ஃபேன் படத்தில் ஷாரூக் கான் மிகவும் இளமையாக காணப்பட்டார். அவரை இளமையாக காட்ட ரெட் சில்லீஸ் நிறுவனம் சிறப்பு கிராபிக்ஸ் செய்திருந்தனர். இந்த முறையில் அனுஷ்கா கிராபிக்ஸ் மூலம் ஒல்லியாக காட்டப்பட்டுள்ளாராம் பாகுபலி 2 படத்தில்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்