ஆப்நகரம்

விஜய்யின் 63வது படத்தை இயக்க போட்டி போடும் இரு இயக்குனர்கள்!

விஜய்யின் 63வது படத்தை இயக்க இரு முன்னணி இய்க்குனர்கள் போட்டிப் போட்டு வருவதாக கூறப்படுகிறது.

TNN 18 Jan 2018, 1:32 pm
விஜய்யின் 63வது படத்தை இயக்க இரு முன்னணி இய்க்குனர்கள் போட்டிப் போட்டு வருவதாக கூறப்படுகிறது.
Samayam Tamil two directors fight for vijay 63
விஜய்யின் 63வது படத்தை இயக்க போட்டி போடும் இரு இயக்குனர்கள்!


நடிகர் விஜய்யின் 62வது படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். இவர் மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைகிறார். இன்னும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை. அதற்குள் விஜய்யின் 63வது படத்தை இயக்க இரு இயக்குனர்கள் போட்டிப் போட்டு வருவதாக தெரிகிறது.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இயக்குனர் எச்.வினோத், சமீபத்தில் விஜய்யை சந்தித்துள்ளார். இந்த படத்திற்காக வினோத் செய்த ஹோம்வொர்க்கை பாராட்டிய விஜய், அவரிடம் ஒரு கதை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது அதேபோல் ‘வேலைக்காரன்’ இயக்குனர் மோகன்ராஜாவை சந்தித்த விஜய் அவரிடம் ‘வேலாயுதம் 2’ படத்தின் கதையை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக, விஜய்யின் 63வது படத்தை இயக்கவுள்ளது இந்த இருவரில் ஒருவர் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்