ஆப்நகரம்

'மாஸ்டர்' படத்திற்கு யூ/ஏ - பொங்கலுக்கு தயார்

தணிக்கையில் யூ/ஏ சான்றிதழுடன் 'மாஸ்டர்' பொங்கலுக்கு ஜனவரி 13-ஆம் தேதி வெளியாவது உறுதியாகிவிட்டது.

Samayam Tamil 24 Dec 2020, 8:08 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்கியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்கில் வெளியாகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Samayam Tamil மாஸ்டர்
மாஸ்டர்


பொங்கல் பண்டிக்கைக்கு ’ஈஸ்வரன்’, ’சுல்தான்’ உள்ளிட்ட படங்கள் வெளியாவதாக சொல்லப்பட்டது. ஆனால், பெரும்பாலான திரையரங்கங்களை மாஸ்டர் படமே எடுத்துக்கொள்ளும் என்பதால் மற்ற படங்கள் வெளியாவது இன்னும் உறுதியாகவில்லை.

இந்நிலையில், தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதை படக்குழு இன்று அறிவித்துள்ளது. இதனையொட்டி அட்டகாசமான போஸ்டர் ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதனை ஏராளமான ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

ராகவா லாரன்சுக்காக இயக்குநராக மாறிய தயாரிப்பாளர்!

தணிக்கை தகவலுடன் படத்தின் வெளியீட்டு தேதியையும் படக்குழு இன்று உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. பொங்கலுக்கு வெளியாவதாக ஏற்கெனவே சொல்லப்பட்டாலும், ஜனவரி 13 என இப்போது தேதியை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்