ஆப்நகரம்

மம்முட்டி படத்தைப் பார்த்துப் பாராட்டிய உதயநிதி!

மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘பேரன்பு’ படத்தை நடிகர் உதயநிதி பார்த்துப் பாராட்டியுள்ளார்.

Samayam Tamil 16 Oct 2018, 3:17 pm
ராம் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பேரன்பு’. இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, நடிகை அஞ்சலி, ‘தங்க மீன்கள்’ சாதனா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Samayam Tamil peranbu


ஏற்கனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்ட நிலையில், பல சர்வதேச விழாக்களுக்கும் அனுப்பி வருகின்றனர் பேரன்பு படக் குழுவினர்.

இந்நிலையில் படத்தைப் பல பிரபங்களுக்கு போட்டு காண்பித்து வருகின்றனர். படத்தைப் பார்த்த அவர்கள் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் உதயநிதியும் இந்தப் படத்தைப் பார்த்துள்ளார்.

இந்த படம் குறித்து நடிகர் உதயநிதி, “இயக்குநர் ராம் சினிமா மீது கொண்டுள்ள பெரும் காதலின் அடையாளம் தான் பேரன்பு!. மம்மூட்டி மற்றும் படக்குழுவினருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்” என அவரது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்