ஆப்நகரம்

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த உதயநிதி...கடைசில இப்படி சொல்லிட்டாரே?

மாமன்னன் படத்திற்கு பிறகு நடிப்பது சந்தேகம் என்ற உதயநிதி ஸ்டாலின்

Samayam Tamil 18 May 2022, 6:36 pm

ஹைலைட்ஸ்:

  • நடிப்பில் இருந்து ஓய்வு
  • உதயநிதி அறிவிப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil udhayanidhi decided to quit acting from mamannan movie
ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த உதயநிதி...கடைசில இப்படி சொல்லிட்டாரே?
2008 ஆம் ஆண்டு குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் உதயநிதி. விஜய் நடிப்பில் உருவான அப்படத்தின் மூலம் தயாரிப்பாளரான உதயநிதிக்கு நடிப்பின் மேல் ஆர்வம் வந்தது. எனவே ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு காண்ணாடி படத்தில் நாயகராக அறிமுகமானார்.
முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. எனவே ஒரு கல் ஒரு காண்ணாடி படம் வெற்றிபெற்றதால் அப்படத்தை போலவே சில படங்களில் நடித்தார் உதயநிதி. ஆனால் அவருக்கு அது கைகூடவில்லை.

பீஸ்ட் விமர்சனத்திற்கு தக்க பதிலடி தந்த ரிப்போர்ட்..!யார் என்ன சொன்னாலும் தளபதி விஜய் கெத்து தான்..
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசினை வெல்லுங்கள்

இந்நிலையில் அஹ்மத் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியன் மனிதன் திரைப்படம் உதயநிதி திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பின் நிமிர், சைக்கோ, கண்ணே கலைமானே என வித்யாசமான கதைக்களத்தில் நடித்து பாராட்டை பெற்றார் உதயநிதி.



அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்..
இதைத்தொடர்ந்து தற்போது அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்துள்ளார் உதயநிதி. இப்படம் மே 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகின்றார் உதயநிதி.


கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். எனவே சமீபத்தில் உதயநிதி பேசுகையில், மாமன்னன் படத்திற்கு பிறகு நடிப்பது சந்தேகம் தான் என்று கூறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி முழுநேரமாக அரசியலில் கவனம் செலுத்தவுள்ளதால் மாமன்னன் படத்திற்கு பிறகு நடிப்பது சந்தேகம் என்று தெரிவித்திருக்கின்றார். இதைத்தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் இந்த தகவலினால் வருதத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்