ஆப்நகரம்

உதயநிதி ஜோடியாக ரெஜினா மற்றும் சிருஷ்டி!

எழில் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் உதயநிதி ஜோடியாக ரெஜினா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர்.

TNN 3 Aug 2016, 5:54 am
எழில் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் உதயநிதி ஜோடியாக ரெஜினா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர்.
Samayam Tamil udhayanidhi pair with rejina and srushti
உதயநிதி ஜோடியாக ரெஜினா மற்றும் சிருஷ்டி!


வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் வெற்றிக்கு பிறகு உதயநிதியை இயக்குகிறார் எழில். பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ரெஜினா மற்றும் சிருஷ்டி டாங்கே ஹீரோயின்களாக நடிக்கின்றனர். ரெஜினா உதயநிதியின் சிறு வயதில் இருந்து பழகும் தோழியாகவும், சிருஷ்டி கல்லூரி கால தோழியாகவும் நடிக்கின்றனர். நட்பு மற்றும் காதலுக்கு இடையே இருக்கும் மோதலை சுவாரஸ்யத்துடன் சொல்லியிருப்பதாக இயக்குநர் கூறியுள்ளார். மேலும் உதயநிதி சிறிய அளவிளான, கிராமத்து அரசியல்வாதியாக நடித்துள்ளார். மேலும் சூரி நகைச்சுவை கலந்த வில்லன் கேரக்டரிலும், மன்சூர் அலிகான் ஜாதிய பின்னணி கொண்ட வில்லனாகவும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்