ஆப்நகரம்

சினிமாவுக்கு நடிகர் விஜய்தான் தளபதி: உதயநிதி ஸ்டாலின்

நடிகர் விஜய்யை தளபதி என்று அழைப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

Samayam Tamil 4 Oct 2018, 4:09 pm
நடிகர் விஜய்யை தளபதி என்று அழைப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
Samayam Tamil maxresdefault


நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது சமூகவலைதளங்களில் வைரலாகியது.நடிகர் விஜய் பேசுகையில் ‘ஒருவேளை தமிழகத்தின் முதல்வராக நான் வந்தால் முதல்வராக நடிக்க மாட்டேன். ஊழல் - லஞ்சத்தை ஒழிப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வேன்’ என்று கூறியிருந்தார். மேலும் நாடாளும் மன்னர்கள்தான் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர், ''விஜய்யை தளபதி என்று அழைப்பதை, திமுகவினர் எப்படி எடுத்துக்கொள்வர். பார்த்து செய்யுங்க சார்'' என்று உதயநிதி ஸ்டாலினிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு உதயநிதி ஸ்டாலின் ''ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான்!'' என்று பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின்மறைமுகமாக விஜய் சினிமாவுக்கு மட்டும்தான் தளபதியாக இருக்க முடியும்என்று சாதுர்யமாக பதில் அளித்திருப்பதாக நெட்டிசன்கள் டுவீட் செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்