ஆப்நகரம்

Maamannan Glimpse: தனுஷ் பாணியில் உதயநிதி: தீயாய் 'மாமன்னன்' படத்தின் மிரட்டலான வீடியோ.!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் 'மாமன்னன்' படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 28 Nov 2022, 7:36 am
'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' படத்தை இயக்கினார். இந்தப்படமும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்நிலையில் மாரி செல்வராஜ் தற்போது நடித்து வரும் 'மாமன்னன்' படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil மாமன்னன்
மாமன்னன்


மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நடிகர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் தனது 47ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

Thunivu: வரிசையாய் வெளியாகும் 'துணிவு' படத்தின் அப்டேட்: கொண்டாட்டத்தில் ஏகே ரசிகர்கள்.!

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் 'மாமன்னன்' படக்குழுவினர் கிளிம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் பேசியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான், உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் இருவருடனும் இணையும் முதல் படம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாரி செல்வராஜ் உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவருடைய கருத்து சிந்தனையே வித்தியாசமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

Ayalaan: வேகமெடுக்கும் 'அயலான்' பட வேலைகள்: சிவகார்த்திகேயனின் அதிரடி திட்டம்.!

அத்துடன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து அவர் நீடூடி வாழ வேண்டும் என்று ஏஆர் ரகுமான் அந்த வீடியோவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனுஷின் 'கர்ணன்' பட பாணியில் உதயநிதி ஸ்டாலின் கையில் வாளேந்தியுள்ள 'மாமன்னன்' கிளிம்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்