ஆப்நகரம்

காயத்தை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் பங்கேற்ற அஜித்

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் வலிமை படம் தொடர்பான முக்கியத் தகவல் வெளி வந்துள்ளது

Samayam Tamil 10 Dec 2020, 10:27 pm
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் முக்கிய அப்டேட் விரைவில் வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil அஜித்
அஜித்


இப்படத்தில் அஜித் - ஹியூமா குரோஷி ஆகியோர் இடம்பெறும் சண்டைக் காட்சியின் படப்பிடிப்பின்போது அஜித்துக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அஜித்துக்கு ஏற்பட்ட காயம் காரணமாக வலிமை படப்பிடிப்பில் தாமதம் ஏற்படலாமென ரசிகர்கள் அச்சத்தில் இருந்தனர். இப்போது, படப்பிடிப்பு தாமதமாக கூடாது என்பதற்காக காயத்தையும் பொருட்படுத்தாமல் அஜித் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

'உறியடி' நாயகனின் புதிய கூட்டணி!


இதனால் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் விரைவில் வலிமை படத்தின் அடுத்த அப்டேட் குறித்து முடிவெடுப்பார்கள் என தெரிகிறது. 'வலிமை' படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி

டிரெண்டிங்