ஆப்நகரம்

விக்ரமின் டீமில் உதவியாளராக இணைந்த உமா ரியாஸ்கான்!

விக்ரம் நடித்து வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் போலீஸ் டீமில் உதவியாளராக நடிகை உமா ரியாஸ்கான் நடித்து வருகிறார்.

TNN 23 Dec 2017, 4:52 pm
விக்ரம் நடித்து வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் போலீஸ் டீமில் உதவியாளராக நடிகை உமா ரியாஸ்கான் நடித்து வருகிறார்.
Samayam Tamil uma riyaz khan join with saamy2
விக்ரமின் டீமில் உதவியாளராக இணைந்த உமா ரியாஸ்கான்!


ஹரி இயக்கத்தில் விக்ரம் தற்போது நடித்துவரும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ஏற்கெனவே வெளியான ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகி வருகிறது. படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார்.

இந்தப் படத்தில், விக்ரம் டீமில் இருக்கும் போலீஸ் அதிகாரிகளில் ஒருவராக உமா ரியாஸ்கான் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மௌன குரு’ படத்தில் போலீஸாக நடித்தவர். ‘இந்தப் படத்துக்குப் பிறகு நான் விஜயசாந்தி லெவலுக்கு வருவேன்’ என்கிறார் உமா ரியாஸ்கான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்