ஆப்நகரம்

தனுஷுக்கு வில்லனாகவேண்டியவர் இவர்தானாம்!

கௌதம் மேனன் படத்தில் நடிகர் தனுஷுக்கு வில்லனாக நடிக்க வேண்டியவர் நடிகர் சமுத்திரக்கனி.

Samayam Tamil 13 Jun 2018, 1:41 pm
கௌதம் மேனன் படத்தில் நடிகர் தனுஷுக்கு வில்லனாக நடிக்க வேண்டியவர் நடிகர் சமுத்திரக்கனி.
Samayam Tamil enai-noki-paayum-thot


இயக்குனர் கௌதம் மேனன் நடிகர் தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வந்தார். இடையில் இந்தப் படம் சில பிரச்னைகளால் நின்று போனது. தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் பற்றி இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘‘கண்டிப்பாக இப்படத்தை ரிலிஸ் செய்வோம். இப்படத்தில் வில்லனாக கௌதமின் உதவி இயக்குனர் ஒருவர் நடித்துள்ளார்.

முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சமுத்திரக்கனியிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஒரு சில காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது’’ என்றார் இயக்குனர் கௌதம் மேனன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்