ஆப்நகரம்

இப்போதுவரை சினிமாவில் என்னை யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை: நடிகை தமன்னா!

சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போதுவரை என்னை யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை என்று நடிகை தமன்னா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

TNN 2 Nov 2017, 4:01 pm
சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போதுவரை என்னை யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை என்று நடிகை தமன்னா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Samayam Tamil until now no one has ever seen me wrong in cinema actress tamanna
இப்போதுவரை சினிமாவில் என்னை யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை: நடிகை தமன்னா!

நடிகை தமன்னா திரையுலகில் பாலியல் வன்முறைகள் நடப்பதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து தமன்னா அளித்த பேட்டி ஒன்றில், ‘‘சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகம் இருப்பது உண்மைதான். இந்த உண்மையை மற்ற நடிகைகள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது. ஆனால் எனது வாழ்க்கையில் அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் பாதையை வைத்துத்தான் நல்லதும் கெட்டதும் வருகின்றன’’ என்றார்.

மேலும் ‘‘2005ம் ஆண்டு தெலுங்கில் ‘ஸ்ரீ’ என்ற படத்தில் அறிமுகமானேன். சினிமாவில் 12 வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறேன். சினிமாவுக்கு வந்ததிலிருந்து இப்போதுவரை என்னை யாரும் தவறான கண்ணோட்டத்தோடு பார்த்ததில்லை.
நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் தென்னிந்திய படங்களில் மட்டுமன்றி பாலிவுட்டிலும் இருக்கிறது என்பதனை சில நடிகைகள் சொல்லி தெரிந்து கொண்டேன். சிலர் உண்மையை சொல்கின்றனர்; பலர் அதை சொல்ல பயப்படுகின்றனர்’’ என்றார் தமன்னா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்