ஆப்நகரம்

உறியடி மீண்டும் களம் காணுமா?

சாதி அரசியலை கதைக்கருவாக கொண்டு வெளியான “உறியடி” திரைப்படத்தை மீண்டும் திரையிட வேண்டும் என அந்த படத்தின் இயக்குநர் விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TNN 9 Jun 2016, 3:53 pm
சாதி அரசியல் தமிழகத்தில் எப்படி நடக்கிறது,சாதி வெறியால் இளைஞர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை இழக்கிறார் என்பதை கதைக்கருவாக கொண்டு சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘உறியடி’.
Samayam Tamil uriyadi director wants his film to be re released
உறியடி மீண்டும் களம் காணுமா?


புதுமுக இயக்குநர் விஜயகுமார் இயக்கியுள்ள இந்த படம் சமூக ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.தமிழகத்தில் சில தியேட்டர்களில் மட்டுமே வெளியானதால் பொருளாதார ரீதியாக இந்த படம் வெற்றியடையவில்லை.எனவே உறியடி படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய வேண்டும் என அப்படத்தின் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: ’உறியடி’ மக்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்.இந்த படத்தின் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன்.ஆனால் ரசிகர்களின் அன்பு கிடைத்தது.

நீங்கள் சென்னையைச் சேர்ந்தவர் என்றால், உறியடி படத்தை பார்க்க வேண்டும் என்றால், நாளைக்குள் திரையரங்கிற்கு செல்லுங்கள்.நாளைக்கு பிறகு படம் தியேட்டரில் திரையிடப்படுமா?என தெரியவில்லை.மற்ற பகுதிகளிலும் படத்தை திரையிட முயற்சி எடுத்து வருகிறோம்.விரைவில் உறியடி படம் ஓடும் தியேட்டர்களின் பட்டியலை வெளியிடுகிறேன்.

இந்த படத்தை பற்றி மக்கள் சமூக வளைதளங்களில் பெரிய அளவில் விவாதித்தால் மட்டுமே, இந்த படத்தை திரையிட்டால் லாபம் இருக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுப்பார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்