ஆப்நகரம்

கவண் படத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பாராட்டு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் ஆகியோரது நடிப்பில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கவண்.

TNN 2 Apr 2017, 5:58 pm
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் ஆகியோரது நடிப்பில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கவண். ஒளிப்பதிவாளராக இருந்து தற்போது முன்னணி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளவர் கே.வி.ஆனந்த்.
Samayam Tamil us president donald trump praises kavan movie
கவண் படத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பாராட்டு


இப்படத்தில் டி.ராஜேந்திரன், போஸ் வெங்கட், பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், நாசர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விமர்சகர்கள் ரீதியில் பெரும் வரபேற்பு இல்லை என்றாலும், லாஜிக் தேவையில்லை மேஜிக்கே போதும் என்ற அடிப்படையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Ha ha... https://t.co/qZ8ExoEeSg — anand k v (@anavenkat) March 30, 2017 இப்படை கொண்டாடி வரும் வேளையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பெயரில் இயங்கும் போலி ட்விட்டர் கணக்கில், "நான் சொன்னது போலவே கவண் படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறீர்கள்" என டிரம்ப் பாராட்டுவது போல் டுவீட் இருந்துள்ளது. இதற்கு கே.வி.ஆனந்த், "டிரம்ப் தலைலேயே கைவெச்சிட்டீங்களா?" என கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Kavan Huge Winner! Exposes what I have always been saying about dishonest & corrupt TRP hungry media! @anavenkat @archanakalpathi — DonaldTrump (@DonaldTrumpMama) March 30, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்