ஆப்நகரம்

வடசென்னை வெளியீடு குறித்து அறிவித்தார் தனுஷ்!!

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வடசென்னை படத்தின் டிரைலர் வரும் ஜூலை மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Jun 2018, 11:20 pm
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வடசென்னை படத்தின் டிரைலர் வரும் ஜூலை மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil வடசென்னை வெளியீடு குறித்து அறிவித்தார் தனுஷ்!!
வடசென்னை வெளியீடு குறித்து அறிவித்தார் தனுஷ்!!


நடிகர் தனுஷ்-வெற்றி மாறன் கூட்டணியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘ஆடுகளம்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. வசூல் மழை பொழிந்த அந்தத் திரைப்படம், 6 தேசிய விருதுகளைப் பெற்று சாதனையும் படைத்தது.

அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின், தனுஷும் வெற்றிமாறனும் ‘வடசென்னை’ படத்தில் இணைவதாக தகவல் வெளியானது. நீண்ட நாட்களாக படவேலைகள் எதுவும் நடக்காததால், படம் வெளியாகுமா ஆகாதா என பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன.

இதையடுத்து, ஒருவழியாக படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், படத்தின் டிரைலர் வரும் ஜூலை மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். மேலும், படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்