ஆப்நகரம்

வடிவேலு ஆடும் வாத்தி கமிங் ஒத்தே - இப்ப இதான் ட்ரெண்ட்!

மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கமிங் ஒத்தே பாடலுக்கு நடனமாடி பலரும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், வடிவேலு இந்த பாடலுக்கு நடனமாடினால் எப்படி இருக்கும்...

Samayam Tamil 14 Mar 2020, 2:07 pm
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடலான வாத்தி கமிங் ஒத்தே பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவு செய்யும் சேலஞ்ச் தற்போது பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. பலரும் தங்கள் நண்பர்களோடு இந்த சேலஞ்சை ஏற்றுக் கொண்டு நடனமாடுகின்றனர். சிலரோ வழக்கம்போல வடிவேலுவின் காட்சிகளை தொகுத்து அவரை இந்த பாடலுக்கு நடனமாடுவது போல எடிட் செய்துள்ளனர்.
Samayam Tamil vadivelu



1995ம் ஆண்டு வெளியான எல்லாமே என் ராசாதான் படத்தில் வரும் எட்டணா இருந்தா பாடலுக்கு வடிவேலு மைக்கேல் ஜாக்சன் போல நடனமாடியிருப்பார். அந்த பாடல் காட்சியை , வாத்தி கமிங் பாடலுக்கு ஏற்றவாறு தொகுத்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இது மட்டுமின்றி, நகைச்சுவை நடிகர் செந்தில் நடனமாடும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. இதே பாடலுக்கு செந்தில் நடனமாடும் எடிட் வீடியோவை இங்கு காணுங்கள்.



இதுபோல பலரும் தங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். அதில் சுவாரசியமான வீடியோக்களை இங்கு காணுங்கள்.

இந்த பாடலுக்கு பாட்டி ஆடும் ஆட்டத்தை பாருங்கள். ரசிகர் ஒருவர் தனது பாட்டியுடன் இந்த நடனத்தை வீடியோ செய்து வெளியிட்டுள்ளார்.



இதே பாடலுக்கு தங்கள் குழந்தைகளையும் நடனமாட வைத்து பலர் பதிவிட்டு வருகின்றனர்.



அடுத்த செய்தி

டிரெண்டிங்