ஆப்நகரம்

ஜி.வி.பிரகாஷ் படத்தில் புயலாக களமிறங்கும் வடிவேலு

2011 சட்ட மன்ற தேர்தலுக்கு பின் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்த நகைச்சுவை புயல் வடிவேலு.

TNN 25 Sep 2016, 6:44 pm
2011 சட்ட மன்ற தேர்தலுக்கு பின் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்த நகைச்சுவை புயல் வடிவேலு. இதனால் சினிமா ரசிகர்கள் வருத்தமடைந்தனர். தற்போது மெல்ல ரீ எண்ட்ரி கொடுத்து வரும் வடிவேலு, விஷால், தமன்னா நடிக்கும், சூரி நடிக்கும் ‘கத்திச் சண்டை’ படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார்.
Samayam Tamil vadivelu reentry as a comedian in gv prakash new movie
ஜி.வி.பிரகாஷ் படத்தில் புயலாக களமிறங்கும் வடிவேலு


இந்நிலையில், சந்தானம் ஹீரோவாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம்பாலா, அடுத்து ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். ஜி.வி நிறைய படங்களில் நடித்து வருவதால் அந்த பட வேலைகள் எல்லாம் முடிந்த பின்னர் ராம்பாலாவின் படத்தை தொடங்க உள்ளார். மேலும் இந்த படத்திற்காக மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தபடத்தில் காமெடியனாக வடிவேலுவை நடிக்க வைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கத்திச் சண்டை படத்திற்கு பின் வடிவேலு பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்-ரித்திகா சிங் நடிப்பில் உருவாகும் ‘சிவலிங்கா’ படத்திலும் காமெடியனாக நடிக்கவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்