ஆப்நகரம்

ஆர்யாவால்.. மீண்டும் இணைகிறதா... ரானா... த்ரிஷா ஜோடி!

ஆர்யா, சாயிஷாவின் திருமண அறிவிப்பால், ரானா, த்ரிஷா மீண்டும் இணைந்துள்ளனர். நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் திருமணம் குறித்து முறையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 14 Feb 2019, 5:58 pm

ஹைலைட்ஸ்:

  • ரானாவின் வாழ்த்துக்கு நடிகை த்ரிஷா பதில் அளித்துள்ளார். இதனால் நடிகர் ரானா, த்ரிஷா மீண்டும் ஜோடி சேர்வார்கள் என ரசிகர்கள் பேசத்துவங்கியுள்ளனர்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil trisha-rana
ஆர்யா, சாயிஷாவின் திருமண அறிவிப்பால், ரானா, த்ரிஷா மீண்டும் இணைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. வருடத்திற்கு ஓரிரு படங்களில் மட்டும் நடித்து அதனை வெளியிட்டு வருகிறார். இவரது நடிப்பில் வந்த ராஜா ராணி என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு சொல்லிக்கொள்ளும்படி எந்த படமும் அமையவில்லை.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியில் நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் தற்போது ஆர்யாவின் திருமணம் உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னதாக ஆர்யாவின் நண்பரும், தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்கத்தின் பொருளாளருமான விஷால் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த நிலையில், காதலர் தினமாக இன்று நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் திருமணம் குறித்து முறையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரும் மார்ச் மாதத்தில் சாயிஷாவை திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த அறிவிப்பால் காதல் ஜோடி என பல ஆண்டுகளாக பேசப்பட்ட ரானா, த்ரிஷா மீண்டும் இணைந்துள்ளனர். ஆர்யாவின் திருமண அறிவுப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாகுபலி புகழ் வில்லன் நடிகரான ரானாவும் வாழ்த்து தெரிவித்தார்.
ரானாவின் வாழ்த்துக்கு நடிகை த்ரிஷா பதில் அளித்துள்ளார். இதனால் நடிகர் ரானா, த்ரிஷா மீண்டும் ஜோடி சேர்வார்கள் என ரசிகர்கள் பேசத்துவங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்