ஆப்நகரம்

valimai update செல்லாது, செல்லாது, போனி சொன்னால் தான் நம்புவோம்: அஜித் ஃபேன்ஸ்

வலிமை அப்டேட் கேட்டு கெஞ்சும் அஜித் ரசிகர்கள் தற்போது வெளியாகியுள்ள தகவலை நம்ப மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்கள்.

Samayam Tamil 4 Mar 2020, 12:44 pm
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் என்பது மட்டும் தான் தெரியும். மற்றபடி படம் குறித்து வினோத்தோ, தயாரிப்பாளர் போனி கபூரோ அப்டேட் எதுவும் கொடுப்பது இல்லை.
Samayam Tamil boney kapoor


அவர்கள் அப்டேட் கொடுக்காததை பார்த்து கடுப்பான அஜித் ரசிகர்கள் போனி கபூரை விளாசி ட்வீட் போட்டு ட்விட்டரில் டிரெண்டாக்கவிட்டனர். இதையடுத்து வலிமை அப்டேட் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் 3 வில்லன்களாம், 65 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டதாம், படக்குழு அடுத்ததாக கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்துக்கு செல்கிறதாம்.

இந்த தகவலை போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால் அதை நம்ப முடியாது என்று அடம் பிடிக்கிறார்கள் தல ரசிகர்கள். அஜித் எவ்வளவு பெரிய ஆள் என்பது தெரியாமல் அவரை விட்டுவிட்டு தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் படம் பற்றி மாய்ந்து மாய்ந்து அப்டேட் கொடுத்து ட்வீட் போடுகிறாரே இந்த போனி கபூர் என தல ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள்.

#WorstProducerBONEY: வலிமை தயாரிப்பாளரை கழுவிக் கழுவி ஊத்திய தல ரசிகர்கள்

கோலிவுட்டின் முன்னணி ஹீரோவின் படத்தை தயாரித்துக் கொண்டு போனி கபூர் இப்படி செய்வது சரியில்லை. இனி அஜித் அவர் தயாரிப்பில் நடிக்கவே கூடாது. போனி கபூர், வினோத்துடன் ஒப்பிட்டால் இயக்குநர் சிவாவே எவ்வளவோ மேல் போன்று. எங்களுக்குன்னே இப்படி கெளம்பி வருகிறார்களே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்