ஆப்நகரம்

கண்ணா, மே 1ம் தேதி 2 லட்டு தின்ன ஆசையா?: தல ரசிகாஸ் ஹேப்பி

அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் இல்லாமல் மோஷன் போஸ்டரும் வெளியாகப் போகிறதாம்.

Samayam Tamil 11 Apr 2021, 2:28 pm
அஜித் பிறந்தநாளுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க வலிமை படக்குழு முடிவு செய்திருக்கிறதாம்.
Samayam Tamil valimai update ajith fans to have special treat on may 1st
கண்ணா, மே 1ம் தேதி 2 லட்டு தின்ன ஆசையா?: தல ரசிகாஸ் ஹேப்பி


வலிமை

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. அந்த படம் குறித்து ஓராண்டுக்கும் மேலாக எந்த அப்டேட்டும் இல்லை. அதனால் முதல்வர், பிரதமர் என்று யார், யாரிடமோ வலிமை அப்டேட் கேட்டார்கள் அஜித் ரசிகர்கள். இந்நிலையில் அஜித் பிறந்தநாள் அன்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அண்மையில் சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் மேலும் ஒரு நல்ல செய்தி வெளியாகியிருக்கிறது.

டபுள் ட்ரீட்

மே 1ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமல்ல மோஷன் போஸ்டரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆக, அஜித் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் இருக்கு. வலிமை படத்தின் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. முக்கியமான பைக் ஸ்டண்ட் காட்சியை தான் படமாக்க வேண்டியிருக்கிறது. அந்த காட்சியை ஸ்பெயினில் படமாக்க படக்குழு காத்துக் கொண்டிருக்கிறது. ஸ்பெயினில் இருக்கும் நிபுணர்களின் உதவியுடன் தான் அந்த காட்சியை படமாக்க முடியுமாம். கொரோனா வைரஸ் பிரச்சனையால் தான் படக்குழுவால் ஸ்பெயினுக்கு உடனே கிளம்ப முடியவில்லை. அங்கு 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பாம்.

கொரோனா

கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பே வலிமை படப்பிடிப்பு துவங்கப்பட்டது. கொரோனா பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் பல மாதங்களாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தனர். அதன் பிறகு தான் படப்பிடிப்பை துவங்கி விறுவிறுப்பாக நடத்தினார்கள். அந்த ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியை மட்டும் படமாக்கிவிட்டால் எல்லாம் முடிந்துவிடும். ஆனால் இந்த கொரோனா பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

அஜித்

வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் படத்தில் அம்மா சென்டிமென்ட் தூக்கலாக இருக்கப் போகிறது. அஜித்துக்கு அம்மாவாக சீனியர் நடிகை சுமித்ரா நடித்துள்ளார். அஜித்தின் வலிமை குடும்பத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவியது. படம் பற்றி வினோத் எந்த தகவலும் சொல்லாமல் இருப்பதும் கூட எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்