ஆப்நகரம்

இந்த படங்கள் இன்று இரண்டாவது முறை ரீலிஸ்

தமிழகத்தில் தியேட்டர்கள் இன்று ஸ்டிரைக் முடிந்து திறக்கப்படுவதால், இவன் தந்திரன் மற்றும் வனமகன் ஆகிய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆகின்றன.

TNN 7 Jul 2017, 11:39 am
தமிழகத்தில் தியேட்டர்கள் இன்று ஸ்டிரைக் முடிந்து திறக்கப்படுவதால், இவன் தந்திரன் மற்றும் வனமகன் ஆகிய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆகின்றன.
Samayam Tamil vanamagan and ivan thanthiran movies to hit the screens once again
இந்த படங்கள் இன்று இரண்டாவது முறை ரீலிஸ்


ஜிஎஸ்டி மூலம் திரைத்துறைக்கு ஏற்பட்டுள்ள இரட்டை வரிச்சுமைக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை முதல் தியேட்டர்கள் முடப்பட்டன. இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களான இவன் தந்திரன், அதாகப்பட்டது மகாஜனங்களே ஆகியவற்றுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இவன் தந்திரன் படத்திற்கு தியேட்டர்கள் ஸ்டிரைக் காரணமாக வசூல் வீழ்ச்சி அடைந்திருப்பதாக இயக்குனர் ஆர்.கண்ணன் கவலைத் தெரிவித்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இவன் தந்திரன் மற்றும் வனமகன் படக்குழுவினர், இரு படங்களும் வெள்ளிக்கிழமை முதல் (இன்று) மீண்டும் திரையிடப்பட இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த வாரம் ரிலீஸுக்குக் காத்திருந்த விக்ரம் வேதா, பண்டிகை, திரி ஆகிய திரைப்படங்கள் அடுத்த வாரம் வெளியாக உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்